PEACE POSTER CONTEST CONDUCTED BY LC PENNADAM
பன்னாட்டு சேவைத் திட்டம்:
உலக அமைதி வரைபடப் போட்டி.
– பெண்ணாடம் லயன்ஸ் சங்கம்.
11 – 13 வயதுள்ள இளம் சிறார்களின் கற்பனை வளத்தை தூண்டும் வகையிலும் , உலக அமைதி , ஒற்றுமையை இளம் மனதில் ஊக்குவிக்க வேண்டும் என்ற வகையிலும் பன்னாட்டு லயன்ஸ் பேரியக்கத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் உலக அமைதி வரைபடப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பெண்ணாடம் லயன்ஸ் சங்கத்தின் மூலம் பெண்ணாடம் சுற்றியுள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு சென்று இந்த போட்டியினை நடத்தி வருகிறோம். அதன்படி 21.10.2026 முதல் 27.10.2026 வரை 11 பள்ளிகளில் இருந்து 107 மாணவர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் க்ரேயான்ஸ் மெழுகு பென்சிலும் , சிறப்பாக ஓவியம் வரைந்த ஒருவருக்கு ( ஒவ்வொரு பள்ளியிலும் ) வாட்டர் கலர் பெயிண்ட் பரிசாக வழங்கப்பட்டது.
இறுதியாக 27.10.2026 செவ்வாய் கிழமை முற்பகல் 10.30 மணிக்கு இறையூர் அருணா மேல்நிலைப் பள்ளியில் அனைத்து 107 வரைபடங்களும் காட்சிப்படுத்தப்பட்டு ,
மாவட்டத் தலைவர் PMJF LION இரவிக்குமார் அவர்கள் விரிவாக பார்வையிட்டு ஐந்து வரைபடங்களை சிறந்ததாக தேர்ந்தெடுத்தார்.
இந்நிகழ்வு பெண்ணாடம் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் லயன் R பாண்டியன் அவர்களின் தலைமையில் , சாசனத் தலைவர் லயன் மு.ஞானப்பிரகாசம் , சாசன உறுப்பினர் லயன் மு.திருஞானசம்பந்தம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மாவட்ட அவைப் பொருளாளர் MJF LION V Sakthivel Venkatachalam , GAV – PONDY LION K THIYAGARASAN , GAV – Cuddalore Lion Mezhichelvan Kulandaivelan , அருணா மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் Lion K கோபி , செயலாளர் லயன் P வேல்முருகன் , ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வரைபடங்களை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்திய லயன் K. கோபி சார் தலைமையிலான அருணா மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் & மாணவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
Crayons & Water colour paint நன் கொடையாளர் : லயன் அருண்மொழி அழகப்பன் அவர்கள்.
இணையில்லா வேகம்!
ஈடில்லா ஏற்றம்!!
Accel to Excel !!!
Rooted in Service !
We Serve !!
– PSST ,
Lions Club of Pennadam.
🌱🌴🌳💐🌹🍇🍋🍓

リンクをコピーする
ホームページに戻る